

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஜெட் விமானங்கள் மூலம் குண்டு வீசுவதை நிறுத்துங்கள் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டார்.
சிரியாவில் அதிபர் பஷார் ஆசாத்தை ஆதரிக்கும் வகையில் அரசுக்கு எதிரான படையினர் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை விடுத்துள்ள செய்தியில், “சிரியா வில் முற்றுகையிடப்பட்ட பகுதி களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவது மற்றும் தேசிய அளவில் சண்டை நிறுத்தம் தொடங் குவது ஆகியவற்றை விரைந்து செயல்படுத்துவதன் அவசியத்தை புதினிடம் ஒபாமா விளக்கினார்.
சிரியாவில் ரஷ்யாவின் தாக்கு தலால் அப்பாவி மக்கள் பெருமள வில் கொல்லப்பட்டு அமைதிக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. அங்கு மிதவாத கிளர்ச்சியாளர் களுக்கு எதிரான வான்வழித் தாக்குதலை ரஷ்யா நிறுத்துவதன் மூலம் இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்மாக செயல்பட முடியும் என்றும் வலியுறுத்தினார்.
உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சி யாளர்கள் மின்ஸ்க் உடன்பாட்டை மதித்து நடப்பதும் குறிப்பாக போர் நிறுத்தம் மேற்கொள்வதன் அவசியத்தையும் ஒபாமா வலியுறுத் தினார்” என்று கூறப்பட்டுள்ளது.
“அமெரிக்கா ரஷ்யா இடையிலான உறவு வேகமாக மூழ்கி வருகிறது” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த சனிக்கிழமை கூறினார். இந்நிலை யில் இதற்கு மறுநாள் புதினிடம் ஒபாமா இதனை தெரிவித்துள்ளார்.