நகரங்களை சில நிமிடங்களில் இணைக்கும் ஹைப்பர்லூப் பாட்; மணிக்கு 1,078 கிமீ வேகத்தில் பயணிக்கும்: காணொலி வெளியிட்டது ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் எம்பயர்

எதிர்கால போக்குவரத்து தொழில்நுட்பமான ஹைப்பர்லூப் பாட்கள் (மாதிரி படம்).
எதிர்கால போக்குவரத்து தொழில்நுட்பமான ஹைப்பர்லூப் பாட்கள் (மாதிரி படம்).
Updated on
1 min read

நகரங்களை நிமிடங்களில் இணைக்கும் எதிர்கால போக்குவரத்து தொழில்நுட்பமான ஹைப்பர்லூப் பாட்கள் இயங்கும் விதத்தை காணொலியாக வெளியிட்டுள்ளது ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் எம்பயர் நிறுவனம்.

இது மணிக்கு 1,078 கிமீ வேகத்தில் பயணிக்கும் தொழில்நுட்பமாகும். வெற்றிடம் போன்ற குழாய் அமைப்பில் 28 பேர் வரை அமர்ந்து பயணிக்கக் கூடிய வகையிலான பாட்கள் எந்தவித இணைப்புமின்றி முழுமை யாக மேக்னடிக் லெவிடேஷன் என்கிற மின் காந்தவியல் அடிப்படையில் இயங்கக் கூடிய தாகும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் 21-ம் நூற்றாண்டுக்கான போக்கு வரத்து தொழில்நுட்பமாக இது விளங்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் எம்பயர் நிறுவனம் பல ஆண்டுகளாகவே இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பாட்கள் ரயில் பெட்டிகள்போல ஒன்றோடொன்று இணைக்கப்பட்டது போல் அல்லாமல் இருந்தாலும் ஒன்றையொன்றுமுறையாகப் பின் தொடர்ந்து செல்லும் வகையில் இயங்கக் கூடியது. தேவையின் பொருட்டு பாட்கள் இயக்கப்படும். எல்லாவற்றையும் இயக்கவேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலம் அவை ஒவ்வொன்றும் சென்று சேர வேண்டிய இடத்துக்கு நேரடியாக சென்று சேர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்லூப் பாட்களின் சோதனை ஓட்டங்கள் வெற்றியடைந்ததாகவும், இனி வணிகத்துக்கான தயாரிப்புகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் விர்ஜின்நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் போக்குவரத்து துறை சார்ந்த பொறியாளர்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in