கோஹினூர் வைரம் பாகிஸ்தானுக்கே சொந்தம்: லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு

கோஹினூர் வைரம் பாகிஸ்தானுக்கே சொந்தம்: லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

கோஹினூர் வைரம் பாகிஸ் தானுக்கே சொந்தம், அதை பிரிட்ட னிடம் இருந்து மீட்க வேண்டும் என்று கோரி லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தானின் மூத்த வழக்கறிஞர் ஜாவித் இக்பால் ஜாப்ரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 1849-ம் ஆண்டில் பஞ்சாப் பிராந்தியத்தை கிழக்கு இந்தியா கம்பெனி தன்னுடன் இணைத்துக் கொண்டது. அப்போது அந்த பிராந்திய மன்னராக இருந்த 14 வயது சிறுவனிடம் இருந்து 105 கேரட் கோஹினூர் வைரத்தை கிழக்கு இந்தியா கம்பெனி பறித்துக் கொண்டது. பின்னர் அந்த வைரம் ராணி எலிசபெத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அன்றைய மன்னர் ஆண்ட பகுதி தற்போது பாகிஸ்தான் எல்லை யில் அமைந்துள்ளது. எனவே கோஹினூர் வைரம் பாகிஸ்தா னுக்கே சொந்தம். இந்த மண்ணில் இருந்து பறிக்கப்பட்ட வைரத்தை பிரிட்டனில் இருந்து மீட்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி காலித் மெகமூத் கான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை அவர் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.

கோஹினூர் வைரம் இந்தியா வுக்கே சொந்தம் என்று நீண்ட காலமாக உரிமை கொண்டாடப் பட்டு வருகிறது. இதுகுறித்து கடந்த 2010-ம் ஆண்டில் இந்தியா வந்த டேவிட் கேமரூன் நிருபர் களிடம் கூறியபோது, கோஹினூர் வைரம் தொடர்ந்து பிரிட்டனிடமே இருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in