தலிபான்களிடம் சரணடைவது எனது அகராதியிலேயே கிடையாது: அகமத் மசூத்

படம் உதவி: ட்விட்டர்
படம் உதவி: ட்விட்டர்
Updated on
1 min read

தலிபான்களிடம் சரணடைவது எனது அகராதியிலேயே கிடையாது என்று தலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவர்களில் ஒருவரான அகமத் மசூத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் அகமத் மசூத் பேசும்போது, “நான் சரணடைவதைக் காட்டிலும் மரணிக்கவே விரும்புகிறேன். நான் அகமது ஷா மசூதின் மகன். தலிபான்களிடம் சரணடைவது எனது அகராதியில் கிடையாது. எனினும் நாங்கள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருக்கிறோம். எனது தந்தை எப்போதும் எதிரிகளிடம் பேசுவார். நாங்களும் பேசுவோம்” என்றார்.

ஆப்கன் தலைநகர் காபூலைத் தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் தலிபான்களுக்கு எதிரான போரைத் தலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவரான அகமத் மசூத் அறிவித்துள்ளார்.

ஆப்கனின் முக்கிய மலைப் பிரதேசமான பஞ்ச்ஷிர் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அகமத் மசூத். இவர் மறைந்த ஆப்கன் தலைவர் அகமத் ஷா மசூதின் மகன் ஆவார். 1980களில் ஆப்கனில் நிலவிய சோவியத் எதிர்ப்புப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் அகமத் ஷா மசூத். இவர் ஆப்கனின் தேசியத் தலைவராகக் கருதப்படுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in