காஷ்மீர் விவகாரத்தில் தலிபான்கள் உதவி செய்வர்: பாகிஸ்தான் ஆளுங்கட்சித் தலைவர் சர்ச்சைப் பேட்டி  

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
Updated on
1 min read

காஷ்மீர் விவகாரத்தில் தலிபான்கள் உதவி செய்வர் என்று பாகிஸ்தானின் ஆளுங்கட்சித் தலைவர் ஒருவர் தொலைக்காட்சிப் பேட்டியில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்ஸாஃப் (PTI) கட்சியின் தலைவர் நீலம் இர்ஷாத் ஷேக் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ''காஷ்மீர் விவகாரத்தில் தலிபான்கள் எங்களுடன் துணை நிற்பதாகக் கூறியுள்ளனர்'' என்றார்.

ஆனால், தலிபான்கள் முன்னதாக அளித்த பேட்டியொன்றில் ''காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதன் நிமித்தமாக இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கின்றன'' என்று மழுப்பலாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் தலைவர், காஷ்மீர் விவகாரத்தில் தலிபான்கள் உதவுவார்கள் எனக் கூற, பதறிப்போன தொலைக்காட்சி நிருபர் குறுக்கிட்டு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று உணர்கிறீர்களா? உண்மையில் இதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்ப்பர். இந்தியாவிலும் இது பார்க்கப்படும் என்று எச்சரித்தார்.

ஆனாலும் தொடர்ந்து அந்தத் தலைவரோ, தலிபான்கள் நிச்சயம் உதவுவார்கள். அவர்கள் இந்தியாவால் இழிவாக நடத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இந்தப் பேட்டி பாகிஸ்தான் அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, பாகிஸ்தானும் அதன் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் தான் தலிபான்களை ஊக்குவித்து தங்கள் அரசை வீழ்த்தியதாகக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in