

காபூலிலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப் மாஸ்டர் என்ற விமானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மூவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.இதில் அந்நாட்டு கால்பந்தாட்ட வீரர் ஜாகி அன்வாரி உயிரிழந்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சி மீண்டும் வருமோ என்ற பயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து கடந்த அகஸ்ட் மாதம் 16 ஆம் தேதிமுதல் அச்சத்துடன் வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப் மாஸ்டர் என்ற விமானம் காபூல் நகரிலிருந்து புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தின் டயர் பகுதியின் மேலும், பக்க வாட்டிலும் சிலர் ஏறிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணித்தனர். இந்த நிலையில் விமான புறப்பட்ட சில நிமிடங்களில் அதில் தொங்கிக் கொண்டிருந்த சிலர், ஆகாயத்திலிருந்து விழும் காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில் இதில் உயிர் இறந்தவர்களில் சிலரின் அடையாளங்களை வெளியாகி உள்ளன. ஊடகங்கள் வெளியிட்ட மூவரின் அடையாளங்கள்,
ஜாகி அன்வாரி (19)
ஆப்கானிஸ்தானின் தேசிய ஜூனியர் கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்தவர் ஜாகி அன்வாரி. காபூலிலிருந்து கத்தாருக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்றும் தனது கால் பந்தாட்ட கனவை நினைவாக்கிவிட வேண்டும் என்ற ஆசையில் தனது உயிரை பயணம் வைத்த ஜாகி அன்வாரி இதில் உயிரிழந்திருக்கிறார்.
ஜாகி அன்வாரி மரணத்துக்கு அவர் இடம்பெற்றிருந்த குரோசன் லயன்ஸ் அணி இரங்கல் தெரிவித்துள்ளது.
ஆப்கன் மக்கள் மக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஜாகி அன்வாரி மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சபுஹூல்லா வூதக்
ஆப்கனில் மருத்துவராக பணியாற்றிய சபுஹுல்லா சதக் அமெரிக்க விமானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறார். இவரது உடல் காபூல் விமான நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது சட்டப் பையிலிருந்து சான்றிதழை வைத்து அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஃபிதா முகமத்
இளம்பெண்ணான ஃபிதா முகமதும் விமானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறார்.
இன்னும் சிலரின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருவதாக ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.