பதான்கோட் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவிடம் கூடுதல் ஆதாரம் கேட்கிறது பாக்.

பதான்கோட் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவிடம் கூடுதல் ஆதாரம் கேட்கிறது பாக்.
Updated on
1 min read

பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விசாரணையை மேலும் முன்னெடுத்துச் செல்ல இந்தியாவிடம் பாகிஸ்தான் கூடுதல் ஆதாரங்களை எதிர்பார்க்கிறது.

பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான அரசு 6 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. அக்குழுவினர், வெளியுறவு அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தியாவிடமிருந்து கூடுதல் தகவல், துப்புகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

விசாரணையை மேலும் முன்னெடுத்துச் செல்வது இந்தியாவின் கையில் உள்ளது. கூடுதல் ஆதாரங்கள் தேவை என விசாரணை அமைப்பு வட்டார தகவல் தெரிவிக்கிறது.

“தாக்குதலுக்குப் பயன் படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப் பட்டு இந்திய அரசால் அளிக் கப்பட்ட 5 செல்போன் எண்கள் குறித்து நடத்திய தீவிர விசா ரணை ஏறக்குறைய முடிக்கப் பட்டுள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ள இவற்றிலிருந்து கூடுதல் துப்புகள் கிடைக்க வில்லை” என விசாரணைக் குழு வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்தியாவிடமிருந்து கூடுதல் தகவல் வந்தபிறகே, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அசார் உள்ளிட்டோர் தொடர்பாக முடி வெடுக்க முடியும் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

பதான்கோட் தாக்குதலை விசாரிக்க பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்புத் துறை கூடுதல் ஐ.ஜி ராய் தாஹிர் தலைமையில் 6 பேர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசா ரணைக் குழுவின் அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் வழக்கில் தொடர் புடையவர்களாக கருதப்படுபவர் கள் கைது செய்யப்பட்டு 2 வார மாகியும் அவர்கள் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்படவில்லை. எத்தனைபேர் காவல் துறை யால் பிடித்து வைக்கப்பட் டுள்ளனர் என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை.

மவுலானா மசூத் அசார், அவரது சகாக்கள் சிலருடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதை பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ராணா சனவுல்லா உறுதி செய்துள்ளார். அதேசமயம் மசூத் அசார் கைது செய்யப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இத்தாக்குதலின் சூத்திரதாரி மசூத் அசார்தான் என இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. மசூத் அசாரின் சகோதரர் ரவுப் மற்றும் 5 பேருக்கு இத்தாக்குதலில் தொடர்பிருப்பதாக இந்தியா கூறி வருகிறது.

பதான்கோட் விசாரணையின் தற்போதைய நிலை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in