Published : 14 Aug 2021 04:38 PM
Last Updated : 14 Aug 2021 04:38 PM

ஆஸ்திரேலியாவில் வேகமெடுக்கும் கரோனா: நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மீண்டும் ஊரடங்கு

கரோனா வைரஸின் முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது.

குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.

முக்கியமாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் டெல்டா வகை கரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அங்கு தொடர்ந்து 7-வது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் வைரஸ் பரவல் குறையவில்லை.

உள்ளூர் தொற்று 466 என்று அதிகரித்துள்ள நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு ஊரடங்கு தொடங்கியது. அடுத்த 7 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

அதேபோல் ஊரடங்கு உத்தரவை மதிக்காதவர்களுக்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமா 5000 ஆஸ்திரேலிய டாலர் அளவுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை உறுதி செய்ய நியூ சவுத் வேல்ஸ் நகருக்கு நூற்றுக்கணகான ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் ஓராண்டுக்குப் பிறகு ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து பரவலைத் தடுப்பதற்காக அங்கும் ஒரு வார கால ஊரடங்கு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x