

இந்தியாவில் இனி ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் கிடையாது என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த முடிவை இமெயில் மூலம் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் உள்ளிட்ட சில வலைதளங்களை இணைய கட்டணமின்றி நுகர்வோர் பயன்படுத்தும் வகையில் ஃப்ரீ பேசிக்ஸ் என்ற திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் முன்வைத்தது.
இதற்காக ஒரு பிரச்சாரத்தை ஏற்படுத்தி இந்தியாவில் இமெயில் மூலம் ஆதரவு திரட்டியும் வந்தது. ஆனால், ஃபேஸ்புக்கின் இந்த முயற்சி இணைய சம வாய்ப்புக்கு எதிரானது என கடும் கண்டனக் குரல் எழுந்தது.
மற்றொரு புறம், இணையதளம் பயன்படுத்துவதில் கட்டண அடிப்படையில் சேவை வழங்குவதை டிராய் தடை செய்தது.
இந்நிலையில், டிராய் எதிர்ப்பைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் சமூக வலைதளத்தின் செய்தித் தொடர்பாளர் இ மெயிலில், "இந்தியாவில் இனி ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் கிடையாது" என அறிவித்துள்ளார்.