தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறி விடுங்கள்: குடிமக்களுக்கு அமெரிக்க அரசு வலியுறுத்தல்

தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறி விடுங்கள்: குடிமக்களுக்கு அமெரிக்க அரசு வலியுறுத்தல்
Updated on
1 min read

தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால்,ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களது குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மைய கட்டிடத்தை (இரட்டை கோபுரம்) அல்-கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதிவிமானங்களை மோதி தகர்த்தனர். அதன் பிறகு அல்-கொய்தாதீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

அங்கு தனது படைகளை நிறுத்தி தீவிரவாதிகளையும், தலிபான்களையும் அமெரிக்கா ஒடுக்கியது. தற்போது அங்கிருந்த அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்மாத இறுதிக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். கடந்த வாரம் ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகரான நசார் முகமத் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவங்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இளம்பெண் ஒருவரை தலிபான்கள் அண்மையில் கொலை செய்தனர். மேலும், ஆப்கானிஸ்தானின் அரசு ஊடகமையத் தலைவர், தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்கா உள்ளிட்டவெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவருவதால், ஆப்கானிஸ்தானில் உள்ள பொதுமக்கள் மீதும் தலிபான்கள் தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றனர்.

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்க மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. இதற்காக அங்கு விமானசேவைகள் தொடங்கப்பட்டுள்ள தாகவும், அதை அமெரிக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

படைகள் வாபஸ்

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை அமெரிக்க அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்குள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் போதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அங்கிருந்து அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேறவேண்டும்.

ஆப்கானிஸ்தானில் உள்ளஅமெரிக்கப் படைகள் விரைவில்முற்றிலும் விலக்கிக் கொள்ளப் படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in