Published : 04 Jun 2014 10:00 AM
Last Updated : 04 Jun 2014 10:00 AM

பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்பனை செய்ய ரஷ்யா முடிவு

பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்பனை செய்வதற்கான தடையை ரஷ்யா நீக்கியுள்ளது. இதையடுத்து அந்நாட்டு ராணுவத்திற்கு தேவையான ஹெலிகாப்டர்களை விற்பனை செய்வது குறித்து ரஷ்யாவின் ரோஸ்டெக் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக அந்நிறு வனத்தின் தலைவர் செர்ஜி செமிஜாவ் கூறுகையில், “பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள் ளதையடுத்து, ரஷ்யாவின் எம்.ஐ – 35 ரக ஹெலிகாப்டர்கள் தொடர்பாக இருதரப்பிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத விற்பனையாளராக ரஷ்யா இருந்து வந்தது. இந்நிலையில், பழுதடைந்த, காலாவதியாகிவிட்ட அந்த ஆயுதங்களுக்குப் பதிலாக நவீன ரக ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து சமீப காலமாக இந்தியா வாங்க தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆயுதங் களை விற்பனை செய்வதற்கு பாகிஸ்தான் பக்கம் ரஷ்யா கவனம் செலுத்தத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய பாதுகாப்புத் துறை ஆய்வாளர் பாவெல் பெல் ஜென்காவெர் கூறுகையில், “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சினை இருந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு ஆயுதம் விற்பனை செய்வதில்தான் ரஷ்யா மிகுந்த கவனம் செலுத்தி வந்தது. முந்தைய சோவியத் யூனியனில் இணைந்திருந்தது முதல் தற்போதுவரை ரஷ்யாவின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்தது.

இந்நிலையில் இப்போது பாகிஸ் தான் பக்கம் ரஷ்யா கவனத்தை திருப்பியிருப்பது இப்பிராந்தியம் தொடர்பாக ரஷ்யாவின் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது. பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்பனை செய்யும் நடவடிக்கை, இந்தியா – ரஷ்யா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தும். சர்வதேச விவகாரங்களில் இருநாடு களிடையேயான ஒத்துழைப்பும் கேள்விக்குறியாகிவிடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x