ஐ.நா. மனித உரிமை தலைவர் வருகைக்கு கோத்தபய ராஜபக்ச கண்டனம்

ஐ.நா. மனித உரிமை தலைவர் வருகைக்கு கோத்தபய ராஜபக்ச கண்டனம்
Updated on
1 min read

போர் விசாரணை நிலவரங்களை அறிய ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் தலைவர் ஸெய்த் ராத் அல் ஹுசைன் இலங்கை வந்ததற்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்ச கடும் கண்டங்களை தெரிவித்துள்ளார்.

அதாவது அயல்நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு சமூகத்தை திருப்திபடுத்தவே அவர் வருகை தந்துள்ளார். அவரது வருகை ஒரு ‘பெரிய ஜோக்’ என்று கோத்தபய சாடினார்.

இது குறித்து அவர் கூறும்போது, “ஒருநாள் வந்து விட்டு சூழ்நிலையை அவர் புரிந்து கொண்டு விட முடியுமா? அதுவும் அவர் ஒரு பக்கத்தினரை மட்டுமே சந்திக்கிறார். இது ஒரு பெரிய ஜோக்.

அவர் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்ட மக்களைச் சந்திக்கிறார். அதாவது அயல்நாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவு சமூகத்தினரை திருப்தி செய்வதாகத்தான் அவரது வருகை இருக்கிறது.

எங்கள் ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவையும், ஆயுதங்களையும் வழங்கிய புலம்பெயர்ந்தோர் குழுக்களிடமிருந்துதான் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

30 ஆண்டுகால பிரச்சினையில் ராணுவ வீரர்கள் 30,000 பேர் பலியாகியுள்ளனர், சுமார் 25,000 வீரர்கள் கைகால்களை இழந்துள்ளனர்

எனவே அவர்களை கோர்ட்டில் வைத்து விசாரணை செய்வது நியாயமற்றது. இவ்வாறு செய்தால் இரு சமுதாயத்தினரிடையே ஒற்றுமை வளராது, வேற்றுமைதான் வளரும்” என்றார் கோத்தபய ராஜபக்ச.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in