

இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் கருவூலத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 20 கிலோ தங்கம் மற்றும் 3440 கோடி பணம் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் நிதி மையங்கள், கருவூலங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெரும் பணம் அழிக்கப்பட்டதால், தீவிரவாதிகளின் சம்பளத்தை ஐஎஸ் பாதியாக குறைத்துக் கொண்டது.
இந்நிலையில், வடக்கு இராக்கின் மொசூல் நகரில் நிறு வப்பட்டிருந்த ஐஎஸ் கருவூலம் மற்றும் சிரியாவில் அமைந்தி ருந்த முக்கிய கருவூலத்தின் மீது சமீபத்தில் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 கிலோ தங்கம் மற்றும் 3440 கோடி பணம் அழிக் கப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.