தென் - வடகொரியா இடையே ஓராண்டுக்குப் பிறகு தகவல் தொடர்பு சேவை

தென் - வடகொரியா இடையே ஓராண்டுக்குப் பிறகு தகவல் தொடர்பு சேவை
Updated on
1 min read

வடகொரியா - தென்கொரியா இடையே ஓராண்டுக்குப் பிறகு தகவல் தொடர்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு சேவையை இரு நாடுகளுக்கிடையே தொடங்குவது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் முதலே இரு நாட்டு அதிகாரிகளும் கடிதம் எழுதி வந்தனர். இந்த நிலையில் தற்போது அச்சேவை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “இரு நாடுகளின் உயர் தலைவர்கள் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கிடையே தகவல் தொடர்பு சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தென்கொரியா உறுதி செய்துள்ளதுடன், இரு நாட்டு உறவை மேம்படுத்தவும் தலைவர்கள் உறுதி கொண்டுள்ளனர்.

வடகொரியாவின் ரகசியத் தகவல்களைத் தென்கொரியா வெளியிட்டு வருவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வடகொரியா சுமத்தியது. மேலும், இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த பொதுவான தகவல் தொடர்பு அலுவலகத்தை வடகொரியா கடந்த வருடம் தகர்த்தது.

மேலும், தென்கொரியாவுடனான உறவை முறித்துக்கொள்வதாக அண்மையில் வடகொரியா அறிவித்ததைத் தொடர்ந்து எல்லையில் ராணுவத்தைக் குவித்தது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in