

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருப்பினும், செப்டம்பார் மாதம் மோடி அமெரிக்கா வருவார் என்பது குறித்து உறுதியான தகவல் ஏதையும் தெரிவிக்கவில்லை.
இது குறித்து வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில்: பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்க காத்திருக்கிறோம். இருப்பினும், மோடி வருகை எப்போது என்பது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது என்றார்.
செய்தியாளர்கள் மீண்டும் மோடி எப்போது வருவார் என வலியுறுத்திக் கேட்ட போதும் அதே பதிலையே திரும்பவும் அளித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா செல்வதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக டெல்லி வட்டாரம் தெரிவிக்கிறது.