

மத்திய சீனாவில் கடந்த 60 வருடங்களில் இல்லாத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் 30க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
ஹெனான் மாகாணத்தில் வெள்ளம் அபாய அளவையும் தாண்டிவிட்டதால் அங்கு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சில கிராமங்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. ஹெனான் மாகாணத்தின் சில நீர்த்தேக்கங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து சீன ராணுவம் மீட்புப் பணி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
காலநிலை மாற்றத்தின் விளைவு சீனாவில் பிரதிபலிப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் சீனா: புகைப்படத் தொகுப்பு