பிரபஞ்சத்தின் ரகசியம் அறிய உதவும் அதிநவீன தொலைநோக்கி: உருவாக்குகிறது நாசா

பிரபஞ்சத்தின் ரகசியம் அறிய உதவும் அதிநவீன தொலைநோக்கி: உருவாக்குகிறது நாசா
Updated on
1 min read

‘ஹப்பிள்’ தொலைநோக்கியை விட 100 மடங்கு பெரியதாய் காட்டும் புதிய தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஈடுபட்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் வேற்றுகிரகவாசிகள் பற்றிய தேடுதலுக்கும் பிரபஞ்சத்தின் ரகசியங்களுக்கும் விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது.

பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிவதற்கான தேடுதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக் காவின் நாசா மையம் விண் வெளியை ஆராய்வதற்காக ‘ஹப்பிள்’ என்ற மிகப் பெரிய விண் தொலைநோக்கியை உரு வாக்கியிருந்தது.

தற்போது அதை விட விண் வெளியை 100 மடங்கு பெரியதாய் காட்டும் புதிய தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் நாசா ஈடுபட்டுள்ளது. Wide Field Infrared Survey Telescope (WFIRST) என அழைக்கப்படும் இந்த தொலை நோக்கி மூலம் விண்வெளி பற்றி யும் வேற்று கிரகவாசிகள் பற்றி யும் அதிகம் தெரிந்து கொள்ள முடியும் எனவும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து நாசா விஞ்ஞானி கள் கூறும்போது, ‘‘நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள புதிய உலகங்களை இந்த தொலை நோக்கி மூலம் கண்டுபிடிக்கலாம். மேலும் அந்த உலகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் கள் நிலவுகின்றனவா என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஹப்பிள் தொலைநோக்கியை போலவே WFIRST தொலைநோக்கியும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை நமது கண்களுக்கு காட்டும்’’ என்கின்றனர்.

அகச்சிவப்பு ஒளிகள் தென் படும் விண்வெளியின் பெரும் பகுதிகளை இந்த புதிய தொலை நோக்கி அலசி ஆராய்ந்து பிரபஞ்சம் உருவானது எப்போது, அதன் வடிவம் என்ன? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு விடை யளிக்கும். நமது சூரிய குடும் பத்துக்கு அப்பால் உள்ள நட்சத்திர தொகுதிகள் பற்றிய விவரங்களையும் விவரிக்கும்.

தவிர நமது பால்வெளியில் உள்ள லட்சக்கணக்கான விண் மீன்களின் பிரகாசத்தை கண் காணித்து, புதிய கிரகங்கள் அங்கு மறைந்திருக்கின்றனவா என்பதை யும் இந்த தொலைநோக்கி தெளி வாக காட்டும் என்றும் கூறப்படு கிறது.

இந்த WFIRST தொலை நோக்கி வரும் 2020 மத்தியில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in