

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை சார்பில் மூவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மார்டி அத்திசாரி, நியூசிலாந்து முன்னாள் கவர்னர்-ஜெனரல் சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கையில் 2009-ல் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் தரப்பில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக மூவர் குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.
இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவி பிள்ளை கூறியபோது, மிகவும் சவாலான பணியை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கி றது. இலங்கை அரசும் மக்களும் குழுவினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்றார்.
மூவர் குழுவுக்கு உதவியாக தடயவியல் நிபுணர்கள், பாலின நிபுணர், சட்ட ஆலோசகர், இதர துறைகளின் நிபுணர்களும் பணியாற்ற உள்ளனர். இக்குழுவி னர் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை 10 மாதங்கள் தங்கள் விசாரணையை நடத்த உள்ளனர். அதன்பின் ஐ.நா. சபையில் தங்கள் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாடு கடந்த மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெற்றது. அப்போது இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறை வேற்றப்பட்டது. இந்த தீர்மானத் தில் கவுன்சில் தலைவர் நவி பிள்ளையின் ஆய்வறிக்கை முழுமையாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. அவரது பரிந்துரையின்படி சர்வதேச விசாரணை நடத்த இப்போது மூவர் குழு நியமிக்கப் பட்டுள்ளது.
வரவேற்பு
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை சார்பில் மூவர் குழு நியமிக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளி யுறவுத்துறை செய்தித் தொடர் பாளர் மேரி ஹார்ப் கூறிய போது, இலங்கை அரசு ஜனநாயகப் பூர்வமாக செயல்பட வேண்டும், மனித உரிமைகளை மதிக்க வேண்டும். தவறிழைத்தவர்களை நீதிக்கு முன்பு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.