Published : 17 Jul 2021 09:33 PM
Last Updated : 17 Jul 2021 09:33 PM

கோவிஷீல்டுக்கு பிரான்ஸ் ஒப்புதல்: பச்சைக்கொடி காட்டியுள்ள நாடுகளின் முழுமையான பட்டியல் 

இந்தியாவின் கோவிஷீல்டுக்கு பச்சைக் கொடி காட்டிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் பட்டியலில் பிரான்ஸும் இணைந்துள்ளது.

கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், வெளிநாடு செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை வைத்துக் கொள்வது அவசியமாகியிருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் உள்ளிட்டோர் தங்கள் நாட்டுக்கு பயணம் செய்யும்பட்சத்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் தெரிவித்தன.
ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வோருக்கு மட்டுமே கட்டுப்பாடுகளற்ற அனுமதி என்றும் தெரிவித்தன.

இது, கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ள இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், தொழில் வர்த்தகர்கள் எனப் பலதரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏன் இந்தத் தடை?

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மை மருத்துவக் கூட்டமைப்பான ஐரோப்பிய மருத்துவ முகமை (EMA) இதுவரை ஃபைஸர், மாடர்னா, ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் ஆஸ்ட்ராஜெனிக்காவின் வாக்ஸ்ஜெர்விரா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளை மட்டுமே அங்கீகரித்துள்ளது. இந்த 4 தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே பெருந்தொற்று காலத்தில் எவ்வித தடையும் இல்லாமல் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஐஎம்ஏவின் பரிந்துரைப் பட்டியலில் கோவாக்சின், கோவிஷீல்டு இடம்பெறாத நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனாலேயே ஐரோப்பிய யூனியன் நாடுகளும் கெடுபிடி விதித்தது.

இருப்பினும், உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டுக்குள் எந்த தடுப்பூசியைப் போட்டவர்கள் அனுமதிக்கப்படலாம் என்றும் அதிகாரம் அளித்திருக்கிறது.

இத்தகைய சூழலில்தான், பிரான்ஸ் நாடும் கோவிஷீல்டை அனுமதித்துள்ளது.

இது குறித்து சீரம் இன்ஸ்டிட்யூட்டின் அடார் பூனாவாலா கூறும்போது, "பிரான்ஸ் நாட்டின் ஒப்புதல் ஒரு நற்செய்தி. இதுவரை மொத்தம் 16 ஐரோப்பிய யூனியன் நாடுகள் கோவிஷீல்டை அங்கீகரித்துள்ளன. தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலுமே ஒவ்வொரு நாட்டிலும் நுழைவு அனுமதி என்பது வேறுபடும் என்பதை பயணம் செய்வோர் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்லோவேனியா, ஆஸ்ட்ரியா, கிரீஸ், அயர்லாந்து, எஸ்டோனியா, ஸ்பெயின், ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆண்டிகுவா அண்ட் பார்புடா, அர்ஜென்டினா, பஹ்ரைன், வங்கதேசம், பார்படா, போட்வானா, பிரேசில், கேபா வெர்டே, கனடா, கோட் டி ஐவர், டொமினிகா, எகிப்து, எதியோபியா, கானா, கிரனடா, ஹங்கேரி, ஜமைக்கா, லெபனான், மாலத்தீவு, மொராக்கோ, நமிபியா, நேபாளம், நைஜீரியா, செயின்ட் கிட்ஸ் அண்ட நெவிஸ், செயின்ட் லூஸியா, செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரெனடைன்ஸ், செய்செல்ஸ், சாலமன் தீவுகள், சோமாலிய, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, சுரினாம், பஹாமாஸ், டொங்கா, டிரினிடா அண்ட் டொபாகோ ஆகிய நாடுகள் அனுமதியளித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x