

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடி குண்டுகள் வைக்கப்பட்டி ருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் உடனடி யாக வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெடி குண்டு நிபுணர்கள், சோதனை யிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அது வெறும் புரளி என தெரியவந்தது.
27 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரி யர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.