அமெரிக்க, ஐ.நா. உதவியை நாடும் ஹைதி

அமெரிக்க, ஐ.நா. உதவியை நாடும் ஹைதி
Updated on
1 min read

நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை பாதுக்காக்க படை வீரர்களை அனுப்பி உதவுமாறு ஹைதி அரசுக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே 28 பேர்க் கொண்ட வெளிநாட்டு கூலிப் படையால கொல்லட்டப்பட்டார். இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஹைதியில் அசாதரணமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் ஹதியில் பதற்றத்தை குறைக்கவும், துறைமுகங்கள், விமான நிலையங்களை பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐ.நா. தங்களது பாதுகாப்பு வீரர்களை அனுப்புமாறு ஹைதி அரசுக் கேட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், ஹைதிக்கு ஹெஃப்பிஐ அதிகாரிகள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்த நிலையில் இந்தக் கோரிக்கையை ஹைதி விடுத்துள்ளது.

என்ன நடக்கிறது ஹைதியில்..

ஹைதியின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் அந்நாடு பெரும் கலவரங்களுக்காக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. வறுமையாலும் வேலையின்மையாலும் கடந்த பல ஆண்டுகளாக ஹைதி சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ஹைதியின் அதிபராக ஜொவினெல் மொய்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் கலவரம் காரணமாக, அதிகாரபூர்வமாக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் மொய்சே ஹைதியின் அதிபராகப் பதிவியேற்றார்.

மொய்சேவின் பதவியேற்புக்குப் பிறகு நாட்டில் வறுமை, வேலையின்மை குறையவில்லை. மாறாக மொய்சேவுக்கு எதிராக நாளும் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

ஹைதி நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொந்தளிப்புகளின் மையமாக மொய்ஸே கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்தார்.

மேலும், நாட்டின் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்தார். இதன் காரணமாக அவருடைய பாதுகாப்புக்கும் அச்சம் நிலவியது.

மொய்சேவின் பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால், தான் 2017ஆம் ஆண்டுதான் பதவியேற்றதாகத் தெரிவித்து தனது பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டித்தார் மொய்சே. இந்த நிலையில் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

1.1 கோடி மக்கள்தொகை கொண்ட ஹைதியில் 59%க்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in