Last Updated : 10 Feb, 2016 10:08 AM

 

Published : 10 Feb 2016 10:08 AM
Last Updated : 10 Feb 2016 10:08 AM

இந்து திருமண சட்ட மசோதாவுக்கு பாக். ஒப்புதல்

பாகிஸ்தானில் இந்துக்களுக்கான திருமண சட்ட மசோதாவை சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து வந்தது. சவுத்ரி முகமது பஷிர் விர்க் தலைமையிலான இக்குழு வில் 5 இந்து எம்பிக்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இந்த மசோதாவின் இறுதி வரைவுக்கு நிலைக் குழு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இறுதி வரை இந்த மசோதாவை தாமதப்படுத்த முயற்சி நடைபெற்றது. ஆனால் அதையும் மீறி 2 திருத்தங்களுடன் ஒருமனதாக இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, ஆண், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக இந்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும். ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் பிஎம்எல் (என்) கட்சி ஆதரவாக இருப்ப தால் இந்த மசோதா விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

திருமணமான ஆணோ, பெண்ணோ முஸ்லிமாக மதம் மாறினால் திருமணத்தை ரத்து செய்ய இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று ஆளும் பிஎம்எல் (என்) எம்பி டாக்டர் ரமேஷ் குமார் வங்க்வானி கேட்டுக்கொண்டார் ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித் தனர். இதனால் இந்தப் பிரிவு அப்படியே தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x