

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரின் ஜோகார் பகுதியில் லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது வீடு உள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு உட்பட இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல் களில் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. சர்வதேச நிர்பந்தம் காரணமாக ஹபீஸ்சையது சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். கடந்த ஜூன் 23-ம் தேதி லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பு குறித்து பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், இஸ்லாமாபாத்தில் நேற்று கூறும்போது, ‘‘கடந்த ஜூன் 23-ம் தேதி லாகூரில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான ரா உள்ளது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன’’ என்றார்.