துருக்கியில் கார் குண்டுவெடிப்பில் 28 பேர் பலி

துருக்கியில் கார் குண்டுவெடிப்பில் 28 பேர் பலி
Updated on
1 min read

துருக்கியின் அங்காரா நகரில் நேற்று முன்தினம் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் பலியாகினர். இதற்கு குர்திஷ் தீவிரவாதிகளே காரணம் என்று துருக்கி பிரதமர் அகமத் தவுதாக்லு குற்றம் சாட்டினார்.

அங்காரா நகரின் மையப் பகுதியில் நேற்று முன்தினம் சிக்னலில் காத்திருந்த 2 ராணுவ வாகனங்கள் மீது வெடிகுண்டு பொருத்தப்பட்ட கார் மோதி வெடித்தது. இத்தாக்குதலில் 28 பேர் இறந்தனர். மேலும் 61 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து துருக்கி பிரதமர் அகமத் தவுதாக்லு கூறும்போது, “இந்த தாக்குதலுக்கு குர்திஷ் தீவிரவாதிகளே காரணம். சிரியா வில் இருந்து துருக்கியில் ஊடுரு விய குர்திஷ் தீவிரவாதி உதவி யுடன் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி இத்தாக்குதலை நடத்தியுள் ளது. குண்டு வெடிப்பை நிகழ்த்தி யவர் சிரியாவைச் சேர்ந்த சாலிஹ் நெகர் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை கைது செய்துள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in