பாகிஸ்தானில் பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்: மக்களின் கடும் எதிர்ப்பால் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன

பாகிஸ்தானில் பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்: மக்களின் கடும் எதிர்ப்பால் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன
Updated on
1 min read

பாகிஸ்தானில் பிரபலமான இசைக்குழு ஒன்றின் பேஸ்புக் பக்கத்தையும் பல இடதுசாரி குழுக்களின் பேஸ்புக் பக்கங்களை யும் அந்நாட்டு அரசின் உத்தரவுக் கிணங்க பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளதால் அந்த நிறுவனத்தைப் பலரும் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் 'லால்' இசைக் குழு தலிபான்களுக்கு எதிராகக் கருத்து கூறி வந்தது. சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான பேரால் விரும்பப்பட்ட இந்தக் குழுவின் பேஸ்புக் பக்கம் அரசின் உத்தரவுக் கிணங்க முடக்கப்பட்டுள்ளது.

பல பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தளங்களில் வெளியிடப் பட்ட கடுமையான எதிர்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக அரசு தன் முடிவைப் பின்வாங்கிக் கொண்டு அந்த இசைக்குழுவின் பேஸ்புக் பக்கத்தை மீண்டும் பயன் பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

எனினும் பாகிஸ்தானில் முற்போக்குவாதங்களை மேற் கொண்ட ஆறு இடதுசாரி குழுக்க ளின் பக்கங்கள் தொடர்ந்து முடக்கப் பட்டுள்ளன என்று வழக்கறிஞர்கள் கூறியிருக்கிறார் கள்.

பாகிஸ்தானில் இணைய சுதந்திரத்திற்காகப் போராடி வரும் 'பைட்ஸ் ஃபார் ஆல் பாகிஸ்தான்' எனும் அமைப்பைச் சேர்ந்த சாஷஸ் அகமது கூறியபோது, "கருத்து சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதாக பேஸ்புக் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. ஆனால் அது அப்படி நடந்து கொள்ளவில்லை. தங்களின் சுயலாபத்துக்காக அரசின் உத்தரவுகளுக்கு அது இரையாகிறது" என்கிறார்.

பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியபோது, "உள்நாட்டுச் சட்டங் களுக்கு பேஸ்புக் அடிபணிந்தாக வேண்டும். பாகிஸ்தானில் இணைய கட்டுப்பாடுகளைச் செயல்படுத்து கிற பாகிஸ்தான் டெலிகம்யூனி கேஷன்ஸ் அதாரிட் டியிடமிருந்து கோரிக்கை வந்த பிறகுதான் சில பேஸ்புக் பக்கங்கள் முடக்கப் பட்டுள்ளன. எந்தெந்த நாடுகளில் எந்தெந்த பக்கங்கள் எல்லாம் சட்டத்துக்குப் புறம்பானவை என்று கருதப்படு கின்றனவோ அவற்றை மட்டுமே நாங்கள் முடக்குகிறோம்" என்றார்.

கடந்த 2010-ம் ஆண்டில் முகமது நபி குறித்து கேலிச் சித்திரங்கள் பேஸ்புக் மூலமாகப் பரவிய காலத்தில் பாகிஸ்தானில் பேஸ்புக் முற்றாக முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே ஆண்டு சுமார் 162 பாகிஸ்தான் பேஸ்புக் பக்கங்க ளும் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடு களில் இருந்து சுமார் 4,700 பேஸ்புக் பக்கங்களும் முடக்கப்பட் டன.

முற்போக்குக் குழுக்களின் பக்கங்கள் முடக்கப்படுகிற அதே சமயம் பாகிஸ்தானில் பிரிவினை யைத் தூண்டுகிற, வன்முறையை ஏற்படுத்துகிற அமைப்புகளின் பக்கங்கள் எதுவும் முடக்கப்படாதது மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

முடிந்த அளவு எந்த ஒரு பக்கத்தையும் சென்ஸார் செய் வதை பேஸ்புக் விரும்புவ தில்லை. எனினும் பாகிஸ்தான் போன்ற கருத்து சுதந்திரம் குறைவாக இருக்கும் நாடுகளில் எங்களின் சுதந்திரம் ஒரு கட்டுக்குள்தான் இருக்கிறது என்கிறார்கள் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in