Last Updated : 07 Dec, 2015 07:33 PM

 

Published : 07 Dec 2015 07:33 PM
Last Updated : 07 Dec 2015 07:33 PM

அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்: நாடுகள் விழித்துக் கொள்ள ஐநா வேண்டுகோள்

பாரீஸ் ஐநா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேசிய தலைமைச்செயலர் பான் கி மூன், பருவநிலை மாற்ற விளைவுகளைத் தடுக்க உலக நாடுகள் ‘எரிசக்தி புரட்சி’-யை அவசரகதியில் மேற்கொள்ள வேண்டிய கடமை உள்ளது என்று கூறினார்.

"நாட்கள் பருவநிலை பேரழிவு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முற்றிலும் வேறு வகையில் மாற்றத்தைக் கொண்டு வர உடன்படிக்கைக்கு பருவநிலை மாற்றம் அழைப்பு விடுத்துள்ளது.

நமது வேலைப்பாடு வறுமையை ஒழிக்க பயன்பட வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த எரிசக்தி புரட்சி தேவை, வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதோடு எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் நமது செயல்பாடுகள் வளர்க்க வேண்டும்.

வளர்ந்த நாடுகள் இதில் வழிகாட்டியாக செயல்படுவது அவசியம் என்பதோடு, வளரும் நாடுகளும் தங்களது திறன்களுக்கு ஏற்ப இன்னும் கூடுதல் பொறுப்பேற்க வேண்டும்" என்றார் பான் கி மூன்.

பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் 21-வது முறையாக சந்தித்து பேசி வருகின்றன, ஆனால் இதில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பருவநிலை மாற்றத்தின் கோர தாண்டவங்களை ஏழை நாடுகளே பெரிதும் அனுபவித்து வருகின்றன.

இந்நிலையில் பருவநிலை மாற்றத்துக்கான ஐநா தலைவர் கிறிஸ்டியானா பிகுயெரா கூறும்போது, “நலிவடைந்த நாடுகளை முழு அளவில் பாதுகாக்கும் கடுமையான ஒப்பந்தங்கள் தேவை. எனக்கப்பால் உள்ள 7 தலைமுறையினரின் கண்கள் என்னை நோக்கி "என்ன செய்தீர்கள்?" என்று கேட்கின்றன.

உங்கள் ஒவ்வொருவரையும் இதே கேள்விகள் தாக்கும். ஆகவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேவையான அனைத்தையும் செய்துள்ளோம் என்று பதிலளிக்குமாறு செயல்பட வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x