

லண்டன் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “லண்டனின் எலிபேண்ட் & கேஸ்டல் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ரயில் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்த வணிக வளாகங்கள், நான்கு கார்கள், டெலிபோன் பாக்ஸ் ஆகியவை எரிந்து சாம்பலாகின.
தீயை அணைக்க 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியானது.
இந்த நிலையில் பொதுமக்கள் யாரும் லண்டன் ரயில் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரவேண்டாம் என்றும், அப்பகுதியில் மேற்கொள்ளும் பயணத்தைத் தவிர்க்குமாறும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். தீ விபத்து எப்படி நடந்தது என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்துக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.