சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கவுரவம் அளிக்கப்படவில்லை: அமித் மிஸ்ரா வேதனை

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கவுரவம் அளிக்கப்படவில்லை: அமித் மிஸ்ரா வேதனை
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். மொத்தம் 50 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் அஸ்வின் 24, ஜடேஜா 16, அமித் மிஸ்ரா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையை பாராட்டாமல், ஆடுகளத்தின் தன்மை குறித்தே அதிகம் பேசப்படு வதாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா வேதனையடைந் துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி: எங்களுக்கு போதிய கவுரவம் அளிக்காமல் ஆடுகளத்தை பற்றியே பேசு கிறார்கள். எங்களுடைய சாதனை கள் பாராட்டப்படவும், பேசப்பட வும் வேண்டும். நம்முடைய ஆடு களங்கள் கடந்த 15 ஆண்டு களாகவே இப்போது இருப்பது போல்தான் உள்ளன.

இவை திடீரென உருவானது இல்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் பாராட்ட வாவது செய்ய வேண்டும். இது போன்ற ஆடுகளங்களில் மட்டும் நாங்கள் சிறப்பாக செயல்பட வில்லை.

இலங்கையில் கூட நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். மற்ற வெளிநாடுகளிலும் நாங்கள் நன்றாக பந்து வீசியுள்ளோம். இங்கு விளையாட வரும் அணிகள் தங்களை நன்றாக தயார் செய்துகொண்டு வரவேண்டும். இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் ஆட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணி நெருக்கடியில் இருப்பதற்கு காரணம் நாங்கள் பவுண்டரி அடிக்கும் வகையிலான பந்துகளை அதிகம் வீசாததுதான். கேப்டன் கோலி எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளார்.

குறிப்பிட்ட வீரரை எப்படி ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என ஆலோசனைகள் வழங்குவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in