

இந்தியாவில் 6 முதல் 11 வயதுக் குள்பட்ட சிறார்களில் பள்ளிக்கு செல்லாதவர்கள் சுமார் 14 லட்சம் பேர் உள்ளதாக ஐ.நா. அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சுமார் 5 கோடியே 80 லட்சம் சிறார்கள் பள் ளிக்குச் செல்லவில்லை. இதில் பாகிஸ்தான், இந்தியா, இந்தோனே ஷியா உள்ளிட்ட 17 நாடுகளில்தான் பள்ளிக்கு செல்லாத குழந்தைக ளின் எண்ணிக்கை மிக அதிக மாக உள்ளது. 2012-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாகிஸ் தானில் மிக அதிகபட்சமாக 54 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை.
ஐ.நா.வின் கல்வி அறிவியல் கலாசார அமைப்பின் அறிக்கை யில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும் பள்ளி செல் லாத சிறார்கள் அதிகம் உள்ள 17 நாடுகளில் கடந்த சில ஆண்டு களாக நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியா வில் பள்ளி செல்லாத சிறார்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.
நேபாளம், ஏமன், கானா, ருவாண்டா, ஈரான், வியட்நாம், ஆப்பிரிக்க நாடான புருண்டி ஆகியவற்றிலும் பள்ளி செல்லாத சிறார்கள் அதிகம் உள்ளனர்.
இலவச கல்வி, சிறு கிராமங் களிலும் பள்ளிகளை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் கல்வி கற்கும் சிறார்களின் எண்ணிக் கையை அதிகரிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.