

எகிப்தில் சினாய் அருகே ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதில் 224 பேர் பலியாயினர். இந்த நிலையில் விபத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்று எகிப்து விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி எகிப்தில் இருந்து ரஷ்யா சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் மொத்தம் 224 பேர் பலியாகினர். விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக என்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பகிரங்கமாக அறிவித்தது.
சினாய் அருகே விமானம் பறந்து கொண்டிருந்தபோது, ரேடார் பதிவிலிருந்து மறைந்தது, எனவே தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியிருக்க வாய்ப்பு இல்லை என்று எகிப்து விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.
ஆனால், விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்களே காரணம் என்று ஐரோப்பிய விசாரணை குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் விபத்தில் தங்களது நாட்டினரை அதிகம் இழந்த ரஷ்யா இது பயங்கரவாத தாக்குதல் தான் என்று திட்டவட்டமாக கூறி வருகிறது.