நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி: 3000 பேர் பங்கேற்பு

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி: 3000 பேர் பங்கேற்பு
Updated on
1 min read


அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

ஏழாவது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக வீடுகளில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதன் முன்னோட்டமாக காணொலி வாயிலாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள், பிரபல யோகா ஆசான்கள், அனுபவம் வாய்ந்த யோகா நிபுணர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து ஒரு வார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஏழாவது சர்வதேச யோகா தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 6.30 மணிக்கு யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இங்கு மட்டுமின்றி உலகம் முழுவதுமே சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்கராந்தி என பெயரிடப்பட்டது. இதில் 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in