கிறிஸ்துமஸ் தினத்தில் பவுர்ணமி: அரிய நிகழ்வென நாசா தகவல்

கிறிஸ்துமஸ் தினத்தில் பவுர்ணமி: அரிய நிகழ்வென நாசா தகவல்
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் தினத்தில் பவுர்ணமி என்பதால் வானில் முழுநிலவு தெரியும். 1977-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அடுத்து இதே போன்று வரும் 2034-ம் ஆண்டு தான் நிகழும் என அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் தோன்றும் பவுர்ணமி, குளிர்காலத்தின் ஆரம்பத்தில் தோன்றுவதால் ‘குளிர் முழு நிலவு’ (ஃபுல் கோல்டு மூன்) என அழைக்கப்படுகிறது.

நாசா இதுதொடர்பாகக் கூறும்போது, “இது அரிய நிகழ்வாகும். வரும் 2034-ம் ஆண்டு வரை இந்நிகழ்வு நடைபெறாது. எனவே, கிறிஸ்துமஸ் தினத்தன்று வானைப் பாருங்கள். வழக்கமாக நிலவைப் பார்ப்பது போல் அல்லாமல் அன்று விசேஷமாக நினைவில் நிற்கும்” என நாசா தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in