

அண்மையில் பிறந்த தன் பெண் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தன் பக்கத்தில் வெளியிட்டுள் ளார். இதற்கு 20 லட்சம் பேர் ‘லைக்’ தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள பேஸ்புக் கின் நிறுவனரான மார்க் ஜூகர் பெர்க்குக்கு கடந்த 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மேக்ஸ் என அவர் பெயர் சூட்டியுள்ளார்.
இந்நிலையில் ‘லிட்டில் மேக்ஸுடன் முழு மகிழ்ச்சி’ என்ற தலைப்பில் குழந்தையுடன் கொஞ்சுவது போன்ற புகைப் படத்தை மார்க் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். புகைப் பட கவிதை போல இருக்கும் இந்த படத்துக்கு ஒரே நாள் இரவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து ‘கிளிக்’ செய்துள்ளனர்.