விக்டோரியா மாகாண மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ராட்சச சிலந்தி வலைகள்

விக்டோரியா மாகாண மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ராட்சச சிலந்தி வலைகள்
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

இந்தச் சூழலில் விக்டோரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிப்ஸ்லேண்ட் நகரவாசிகளை அப்பகுதி சிலந்திகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. அந்நகரின் சாலைப் பகுதி ஓரங்களில் சிலந்திகள் பல மீட்டர்களுக்கு ராட்சச வலைகளைப் பின்னியுள்ளதே காரணம்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தரப்பில், “வெள்ளத்தில் சிலந்திகள் சிக்கிவிடாமல் இருக்க சாலை மீது தங்களது வலைகளைப் பின்னியுள்ளன. இந்த வலைகள் ஒரு ராட்சச வெண்மை நிறப் புல்வெளி போன்று படர்ந்து காணப்படுகிறது. இத்தகைய சிலந்திகள் மனிதர்களுக்கு ஆபத்து எதையும் விளைவிக்காது. எனினும் ஒவ்வாமை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த சிலந்தி வலைகளைக் குறிப்பிட்டு ஆஸ்திரேலிய நெட்டிசன்கள் தங்கள் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in