

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டினா ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பின்போது கோகோ - கோலா குளிர்பான பாட்டிலை மேசையிலிருந்து நகர்த்திய செயலால் அந்நிறுவனத்துக்கு சுமார் 4 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கால்பந்து வீரர்களில் உலகம் முழுவதும் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் ரொனால்டோ. இந்த நிலையில் யூரோ கால்பந்தாட்டத் தொடரில் நேற்று ஹங்கேரி அணியும், போர்ச்சுகல் அணியும் மோதின. இதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ பங்கேற்றார். அப்போது அவரது மேசைக்கு முன்னர் தண்ணீர் பாட்டில்களுடன் இரண்டு கோகோ - கோலா பாட்டில்களும் வைக்கப்பட்டிருந்தன.
இதனைக் கண்ட ரொனால்டோ இரண்டு கோகோ -கோலா பாட்டில்களையும், நகர்த்தி தனது முன்னால் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து என்னிடம் தண்ணீர் உள்ளது என்று காட்டினார்.
ரொனால்டோவின் இந்தச் செயல் காரணமாக கோகோ -கோலா நிறுவனத்தின் சந்தை மதிப்பு நேற்று வீழ்ச்சி அடைந்தது. போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டினா டொனால்டோ செய்தியாளர் சந்திப்பின்போது கோகோ - கோலா குளிர்பான பாட்டிலை மேசையிலிருந்து நகர்த்திய செயலால் அந்நிறுவனத்துக்கு சுமார் 4 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோகோ- கோலா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “நாங்கள் யூரோ கால்பந்தாட்டத்தின் முக்கிய விளம்பரதாரர். அனைவருக்கும் அவர்கள் விரும்பியதைத் தேர்வு செய்ய உரிமை உண்டு” என்று தெரிவித்துள்ளது.
யூரோ கால்பந்தாட்டத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “கோகோ-கோலாவுடன் தண்ணீரும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. கோகோ-கோலாவில் எந்த சர்க்கரையும் இல்லை” என்று தெரிவித்தார்.
கோகோ - கோலா குளிர்பானத்துக்கு எதிராக டொனால்டாவின் இந்தச் செயலை சமூக வலைதளங்களில் பலரும் வரவேற்றுள்ளனர்.