

ஷாஹீன் 1-ஏ ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.
ஷாஹீன் 1-ஏ ஏவுகணையில் புதிய தொழில்நுட்ப மாறுதல்கள் செய்யப்பட்டிருந்ததை அடுத்து இப்பரிசோதனை நடைபெற்றது. 900 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை பல்வேறு விதமான ஆயுதங்களையும் சுமந்து செல்ல வல்லது.
அரபிக் கடலில் உள்ள இலக்கை குறிவைத்து நேற்று இப்பரிசோதனை நடைபெற்றது. கடந்த வாரம் ஷாஹீன்-3 தரையி லிருந்து தரையிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும், 2,750 கி.மீ. தூரம் செல்லும் திறன் கொண்ட ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்தது.
இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் குறுகிய தொலைவு அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகள் பாகிஸ்தானுக்குத் தேவை என பாகிஸ்தான் அரசு ஆலோசகர் காலித் கித்வாய் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.