

பிரிட்டிஷ் எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மீது கடந்த நவம்பர் 13-ம் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்களின் பார்வை பிரிட்டன் மீது திரும்பியுள்ளது.
பிரிட்டிஷ் எம்.பி.க்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக பிரிட்டனில் இருந்து ஐ.எஸ். அமைப்பில் இணைந்த 300 தீவிரவாதிகள் தாய்நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.