பாகிஸ்தானில் தலிபான்கள் மீதான தாக்குதல் தீவிரம்: 20 பேர் பலி- வஜிரிஸ்தானிலிருந்து 1.5 லட்சம் பேர் வெளியேறினர்

பாகிஸ்தானில் தலிபான்கள் மீதான தாக்குதல் தீவிரம்: 20 பேர் பலி- வஜிரிஸ்தானிலிருந்து 1.5 லட்சம் பேர் வெளியேறினர்
Updated on
1 min read

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் புகலிடமாக திகழும் வடமேற்குப் பகுதியில் தலிபான்களுக்கு எதிரான தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. வெள்ளிக் கிழமை நடத்திய தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியிலிருந்து 1.5 லட்சம் பொதுமக்கள் வெளி யேறி உள்ளனர்.

நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானை ஒட்டி உள்ள வடக்கு வஜிரிஸ்தான் மலைப் பகுதியில் பதுங்கி உள்ள தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ஒரு வாரத்துக்கு முன்பு தாக்குதலை தொடங்கியது.

தலிபான் தீவிரவாதிகள் மீது தரைவழியாக தீவிர தாக்குத லில் ஈடுபடவும் ராணுவம் திட்ட மிட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக, கண்டதும் சுடுவதற்கு பிறப்பிக் கப்பட்டிருந்த உத்தரவை ராணுவம் கடந்த புதன்கிழமை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

வெள்ளிக்கிழமை வரை சுமார் 1.5 லட்சம் பொதுமக்கள் அப்பகுதியைவிட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, வஜிரிஸ் தான் பகுதியில் உள்ள முக்கிய நகரான மிரான்ஷாவின் குதப்கெல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் 20 தீவிரவாதி கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதலில் இதுவரை 250 தீவிரவாதிகள் கொல்லப்பட் டுள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை எதிர்த்து போரிடும் தீவிரவாதிகள் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்து செயல்படுவதாகவும், இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. ஆனால் இதை பாகிஸ்தான் பொருட்படுத்தவில்லை.

இதற்கிடையே, பாகிஸ் தானில் தொடரும் தீவிரவாத சம்பவங்களுக்கு முடிவு கட்டுவ தற்காக தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்புடன் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, தீவிரவாதிகள் மீதான தாக்குதலை அந் நாட்டு ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

பன்னு, பெஷாவரில் தஞ்சம்

வடக்கு வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தின ருடன் கூட்டம் கூட்டமாக நடந்தும் வாகனங்கள் மூலமும் வெளி யேறி வருகின் றனர். சிலர் கால்நடை களையும் தங்களுடன் ஓட்டிச் செல்கின்றனர். இவர்கள் பன்னு, பெஷாவர், கோஹட் மற்றும் ஆப்கனை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in