

இந்தோனேசியாவின் மலுக்கு மாகாணத்தில் நேற்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மலுக்கு தீவில் இருந்து வடமேற்கே 242 கி.மீ. தொலைவில் கடலில் 117 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி காணப்பட்டதாக ஜகார்த்தாவில் புவியியல் ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறினார்.நிலநடுக்கத்தால் பாதிப்புகள் குறித்த தகவல் இல்லை.