வில் ஸ்மித், டாம் குரூஸை பின்னுக்கு தள்ளி அதிக சம்பளம் வாங்கிய ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்: போர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் வெளியீடு

வில் ஸ்மித், டாம் குரூஸை பின்னுக்கு தள்ளி அதிக சம்பளம் வாங்கிய ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்: போர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் வெளியீடு
Updated on
1 min read

ஹாலிவுட்டில் இந்த ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய நடிகர் ஜானி டெப் என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஹாலிவுட்டில் 2015-ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய நடிகர் களின் பட்டியலை, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை நேற்று வெளியிட்டது. அதில், வில் ஸ்மித், கிறிஸ்டியன் பாலே, பிராட் பிட், டாம் குரூஸ் போன்ற முன்னணி நட்சத் திரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஜானி டெப். இவர் ‘பைரேட்ஸ் ஆப் த கரீபியன்’ உட்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2014-ம் ஆண்டு ஜானி டெப் 2-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளாக அதிக சம்பளம் வாங்கிய நடிகராக ஆடம் சாண்ட்லர்தான் முதலிடத்தில் இருந்தார். இந்த ஆண்டு பட்டியலில் அவர் சேர்க்கப்படவில்லை. இணையதள சேவை வழங்கும் ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனத்துடன் சாண்ட்லர் மேற்கொண்ட ஒப்பந்தத்தால், போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலில் அவர் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 2-வது இடத்தை நடிகர் டென்சல் வாஷிங்டன் பிடித்துள்ளார். கடந்த 2009, 2010-ம் ஆண்டுகளில் முதலிடம் வகித்த நடிகர் வில் பெர்ரல் இந்த ஆண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

மற்றபடி நடிகர்கள் வில் ஸ்மித், கிறிஸ்டியன் பாலே, சானிங் டாடம், பிராட் பிட், பென் அபலெக், டாம் குரூஸ் ஆகியோர் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ஹாலிவுட்டில் தயாரிப்பாளர் களின் நம்பிக்கை நட்சத்திரம், வசூலை அள்ளித்தரும் நடிகர் என்ற பட்டியலில் கிறிஸ் ஈவான்ஸ் (கேப்டன் அமெரிக்கா, சிவில் வார் போன்ற படங்களில் நடித்தவர்) முதலிடம் வகிக்கிறார். மற்றபடி இந்த பட்டியலில் நடிகைகளின் ஆதிக்கம்தான் உள்ளது. வசூலில் நம்பகத்தன்மை கொண்ட நடிகைகளாக மிலா குனிஸ், ஸ்கார்லெட் ஜோகன்சன், வெய்னீத் பல்ட்ரோ, எம்மா ஸ்டோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in