Last Updated : 04 Jun, 2021 02:30 PM

 

Published : 04 Jun 2021 02:30 PM
Last Updated : 04 Jun 2021 02:30 PM

புதுச்சேரியில் 712 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 18 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 712 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 1600-ஐக் கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூன் 4) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,458 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 530 பேரும், காரைக்காலில் 121 பேரும், ஏனாமில் 36 பேரும், மாஹேவில் 25 பேரும் என மொத்தம் 712 (7.53 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 15 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் ஒருவர் என 18 பேர் உயிரிழந்துள்ளனர். மாஹேவில் புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இவர்களில் 9 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,601 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.48 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 826 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,368 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 8,126 பேரும் என 9 ஆயிரத்து 494 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. புதிதாக 1,215 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்து 731 (89.71 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 10 லட்சத்து 85 ஆயிரத்து 293 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 516 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 442 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x