

விமான பயணத்தின்போது தூங்கிய சீக்கியரை வீடியோ படம் எடுத்து அவரை ஒசாமா பின்லேடனாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சீக்கியர் ஒருவர் அண்மையில் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியாவுக்கு விமா னத்தில் சென்றார். அப்போது அவர் அசதி காரணமாக தூங்கினார்.
அவருக்கு அருகில் இருந்த அமெரிக்க இளைஞர் ஒருவர், தூங்கிய சீக்கியரை வீடியோ படம் எடுத்து அதை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நீங்கள் (அமெரிக்கர்கள்) பாது காப்பாக இருக்கிறீர்களா? என்ற தலைப்புடன் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நான் இப்போது அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் என்று வீடியோவை எடுத்த இளைஞர் பேசியுள்ளார்.
கடந்த 9-ம் தேதி சமூக வலைத் தளத்தில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ இப்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து அமெரிக்கவாழ் சீக்கியர் கூட்டமைப்பின் இயக்குநர் மன்வீந்தர் சிங் கூறியதாவது: தாடி வைத்துள்ள சீக்கியர்களை அமெரிக்கர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதனால் சீக்கியர் களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. விஷமத்தன மான வீடியோக்களும் வெளியிடப் படுகின்றன.
அண்மையில் சீக்கிய குருத்வாரா ஒன்றில் சமூக விரோதிகள் தகாத வார்த்தைகளை கிறுக்கி வைத்துள் ளனர். கால்பந்து விளையாடச் சென்ற 4 சீக்கியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சீக்கியர் களுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.