Last Updated : 27 May, 2021 12:35 PM

 

Published : 27 May 2021 12:35 PM
Last Updated : 27 May 2021 12:35 PM

27 ஆண்டுகள் உறவு: அமேசான் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்: தேதியை முறைப்படி அறிவித்தார்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஜோஸ் | கோப்புப்படம்

நியூயார்க்

அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் 27 ஆண்டுகளாக கட்டமைத்தவருமான ஜெஃப் பெசோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து முறைப்படி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனம் கடந்த 1994-ம் ஆண்டு ஜூலை 5-ம் ேததி நிறுவப்பட்டது. அந்த நாளான ஜூலை 5ம் தேதி தான் தலைமை நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனத்தை சாதாரண புத்தகக்கடையாகச் தொடங்கி, அதன்பின்படிப்படியாக வளர்த்தி ஆன்-லைன் வர்த்தகத்தில் உச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஜெஃப் பெசோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெஃப்பெசோஸுக்குப் பதிலாக, கடந்த 20 ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றிவரும் ஆன்டி ஜாஸே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜூலை 5ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

அமேசான் பங்குதாரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஜெஃப் பெசோஸ் பேசுகையில் “ எனக்கு மிகவும் உகந்த தேதியை, என்னுடன் நெருக்கமான தேதியை தேர்வு செய்துள்ளேன். அந்தத் தேதியில் நான் தலைமை நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். அமேசான் தொடங்கப்பட்ட ஜூலை 5-ம் தேதி நான் விலகுகிறேன். ஏறக்குறைய 27 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தை தொடங்கி நடத்தி இருக்கிறேன்” எனத் தெரிவித்தா்.

அமேசான் தலைமை நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜெஃப் பெசோஸ் கடந்த பிப்ரவரி மாதமே தெரிவித்தபோதிலும் அதற்குரிய தேதியை அவர் அறிவிக்காமல் இருந்து வந்தார். புதிதாகப் பொறுப்பு ஏற்கப் போகும் ஆன்டி ஜேஸே, தற்போது அமேசானின் இணையவழிச் சேவைகளுக்கு பொறுப்பாக இருந்து வருகிறார். புதிதாகப் பொறுப்பேற்கும் ஆன்டி ஜேஸை அமேசினின் புதிய பொருட்கள், சேவைகள் அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்த உள்ளார்.

57 வயதான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 16,700 கோடி டாலராகும். இந்திய மதிப்பில் ஏற்ககுறைய ரூ.13 லட்சம் கோடியாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x