

இலங்கையில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்துக்கு இது வரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இருவரை காணவில்லை என்று பேரிடர் நிவாரணத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இலங்கையின் தென் மேற்கில் உள்ள கலுதரா மாவட்டம் மழை, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பெரும்பாலான இடங்களில் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள நெபோடா பகுதியில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் 10 பேர் இறந்துள்ளனர். ஒருவரை காணவில்லை.
இதுபோல் கொழும்பு மாவட் டத்தில் மழை, வெள்ளத்துக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். கம்பகா மாவட்டத்தில் ஒருவரை காண வில்லை.
கலுதரா மாவட்டத்தில் மீட்பு பணிகளுக்காக கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள், 2 ஹெலி காப்டர்களுடன் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் கிழக்கு திசை யிலிருந்து இலங்கையை நோக்கி 70 – 80 கி.மீ. வேகத்தில் வலு வான காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழைக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளர்.