

இராக்கில் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய சன்னி முஸ்லிம் படையினர் தலைநகர் பாக்தாதை நெருங்கி வருகின்றனர்.
இராக் நாட்டில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்க ஆதரவுடன் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் தற்போது ஆட்சி நடத்தி வருகின்றனர்.
இந்த அரசை எதிர்த்து சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த “இஸ் லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அன்ட் தி லெவன்ட்' (ஐஎஸ்ஐஎல்)” என்ற அமைப்பு போரிட்டு வருகிறது.
அந்தப் படை நாட்டின் 2-வது பெரிய நகரான மொசுல் உள்பட பல்வேறு பகுதிகளைக் கைப் பற்றியுள்ளது. மேலும் வடக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த நினிவே மற்றும் கிர்குக் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. வியாழக் கிழமை அவர்கள் துலிலியா என்ற நகரைக் கைப்பற்றினர்.
சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரும் ஐ.எஸ்.ஐ.எல். படை வசமாகி யுள்ளது. தற்போது அவர்கள் தலைநகர் பாக்தாத் நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஐ.எஸ்.ஐ.எல். செய்தித் தொடர்பாளர் அபு முகமது அல்-அதானி கூறிய போது, எங்கள் படைகள் பாக்தாத் மற்றும் கர்பாலா நகரங்களை நோக்கி முன்னேறி வருகின்றன என்று தெரிவித்தார்.
ஐ.எஸ்.ஐ.எல். படைகள் தற்போது பாக்தாதில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவில் உள்ளன. அந்தப் படைகள் தலைநகரை நெருங்கி வந்து கொண்டிருப்ப தால் பிரதமர் நூரி அல்-மாலிகி தலைமையில் சிறப்பு ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமெரிக்கா ராணுவத் தின் உதவியைக் கோர முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா தரப்பில் தொடர்ந்து மவுனம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இராக் போரில் ஏற் கனவே 4500 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். எனவே மீண்டும் அந்த நாட்டுக்கு படை களை அனுப்ப அமெரிக்கா தயங்குகிறது.
அதற்கு மாற்றாக ஈராக் ராணுவத்துக்கு ஆயுத, தொழில் நுட்பரீதியாக உதவி அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எல். படை யினர் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்த அமெரிக்க ராணுவம் உதவி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே ஷியா முஸ்லிம் களின் புனிதத் தலங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படு வதால் அவற்றைக் காக்க ஷியா பிரிவினர் சார்பில் சிறப்புப் படைகள் உருவாக்கப்பட் டுள்ளன. உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாகி உள்ளனர்.