Published : 26 Jun 2014 12:53 PM
Last Updated : 26 Jun 2014 12:53 PM

இராக் இனியும் ஒருங்கிணைந்த தேசமாக இருக்க சாத்தியம் இல்லை: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை

இராக் இனியும் ஒருங்கிணைந்த தேசமாக இருக்க சாத்தியம் இருப்பதாக தான் நினைக்கவில்லை என இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரிஸ், அமெரிக்க அதிபரிடம் கூறியுள்ளார்.

இராகில் உள்நாட்டு பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் ஐக்கிய எமிரேட் மற்றும் இஸ்லாமிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை கூற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரிஸ், அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில், அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசியபோது, "இராக் தற்போது பிளவுப்பட்டிருக்கும் நிலையிலிருந்து மீள உள்நாட்டு தலைவர்கள் இணைந்து சுமுகமான நிலைப்பாட்டை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றே நான் எதிர்ப்பார்க்கிறேன்.

அங்கிருக்கும் 3 தரப்பினரும் இணைந்து செயல்படும் நிலையில், தகுந்த சமயத்தில் அமெரிக்காவும் தனது படைகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ராணுவத்தால் மட்டுமே இந்த முடிவு கொண்டுவரப்பட கூடாது. ஆனால், இராக் கட்சிகள் இதனை செய்ய முன்வராது என்று நன்கு தெரிகிறது. ஆகையால் இராக் இரண்டாக பிரிக்கப்பட வாய்ப்பு உள்ளது" இவ்வாறு பெரிஸ் அதிபர் ஒபாமாவிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒபாமா - பெரிஸ் சந்திப்பின்போது அமெரிக்காவில் இயங்கி வரும் யூத அமைப்புத் தலைவர்கள் சிலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x