Published : 23 May 2021 05:11 AM
Last Updated : 23 May 2021 05:11 AM

கரோனா தொற்று நெருக்கடியிலும் முன்னணி வளரும் சக்தியாக இந்தியா விளங்குகிறது

இந்தியாவின் கரோனா நெருக்கடி குறித்து எழும் விமர்சனங்கள் குறித்தும் இந்திய அரசியல் பொருளாதார சூழல் குறித்தும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர் டாக்டர் ஜான் சி ஹல்ஸ்மன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை சவுதி யில் வெளிவரும் அரபு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘இந்தியாவில் கரோனா 2-ம் அலை தீவிரமாக அதிகரித்து அச்சுறுத்தி வருகிறது. ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார சிக்கல்கள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன. ஆனால் அத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவின் அடிப் படை அம்சங்கள் வலுவாக இருப்பதால், உலக நாடுகளுக்கு மத்தியில் முன்னணி வளரும் சக்தியாக உருவெடுக்கும்.

மேலும் இத்தனை சவால் களுக்கு இடையிலும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் அரசியல் அதிகார கட்டமைப்பு நிலைத்தன்மையுடன் இருக்கிறது.

வரும் 2024-ம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகவும் பிரபலமான நாடாக இந்தியா உருவெடுக்கும். 25 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் உள்ளனர், 35 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 65 சதவீதத்துக்கு மேல் உள்ளனர். மனிதவளம் சார்ந்த இந்த அம்சம் இந்தியாவின் வளர்ச்சிக்கு் பெரும் உதவியாக இருக்கும்’’ என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x