ஊழல் குற்றச்சாட்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை
ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எகுத் ஆல்மர்ட்டின் தண்டனைக் காலத்தை 6 ஆண்டுகளிலிருந்து 18 மாதங்களாகக் குறைத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
எகுத் ஆல்மர்ட் 1993-2003 கால கட்டத்தில் ஜெருசலேம் நகர மேயராகவும், நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சராகவும் இருந்த போது, ரியல் எஸ்டேட் திட்டம் ஒன்றுக்காக லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதன்பின் 2006-ம் ஆண்டு இஸ்ரேல் பிரதமராக பொறுப் பேற்றார். ஆனால், முந்தைய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நெருக்கடியால் 2009-ம் ஆண்டு அவர் பதவி விலக நேர்ந்தது.
இதைத்தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தன்மீதான குற்றச்சாட்டை ஆல்மட் மறுத்தார். மேல்முறை யீட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை அவர் சிறையில் இருக்க வேண்டிய தில்லை என அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை பாதி யளவு ஏற்றது. அவரின் தண்ட னைக் காலம் 18 மாதங்களாக குறைக் கப்பட்டது. வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
இதுதொடர்பாக ஆல்மர்ட் கூறும்போது, “நான் ஒருபோதும் லஞ்சம் கொடுத்ததோ, பெற்றதோ இல்லை. இந்த தீர்ப்பு கடினமா னதாக இருந்தாலும், ஓரளவு நிம்மதியை அளிக்கிறது. என் இதயத் திலிருந்து கனமான கல் அகற்றப் பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பை மதிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆல்மர்ட் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பாலஸ்தீனத்துடன் அமைதி உடன்படிக்கையை ஏற் படுத்தினார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை நாட்டை ஆட்சி செய்தவர் தற்போது சிறை தண்ட னையை எதிர்நோக்கியுள்ளார்.
அமெரிக்க ஆதரவாளர் ஒரு வரிடமிருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதற்காக வேறொரு வழக்கில் ஆல்மர்ட்டுக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள் ளது. அந்த தீர்ப்பை எதிர்த்தும் ஆல்மர்ட் மேல்முறையீடு செய்துள் ளார்.
