இந்தியாவுடன் சுமுகமான உறவை பராமரிக்க அதிக முக்கியத்துவம்: பாகிஸ்தான் மூத்த அதிகாரி தகவல்

இந்தியாவுடன் சுமுகமான உறவை பராமரிக்க அதிக முக்கியத்துவம்: பாகிஸ்தான் மூத்த அதிகாரி தகவல்
Updated on
1 min read

இந்தியாவுடன் சுமுகமான உறவை பராமரிக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் (வெளியுறவு விவகாரம்) சையது தாரிக் பதேமி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டி.சி.ஏ.ராகவனுக்கு இஸ்லா மாபாத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது, தாரிக் பதேமி கூறியதாவது:

இந்தியாவுடன் சுமுகமான உறவை பராமரிக்க பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இங்கு நடைபெற்ற ஆப்கானிஸ்தான் தொடர்பான ‘ஹார்ட் ஆப் ஆசியா’ மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டது வரவேற்கத் தக்கது.

இந்த நடவடிக்கை ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற இவ்விரு நாடு களின் விருப்பத்தை வலுப்படுத்த உறுதுணையாக இருக்கும்.

இந்தியா-பாகிஸ்தான் இடை யிலான உறவை மேம்படுத்துவ தற்காக டிசிஏ ராகவன் தனது பணிக்காலத்தில் எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இதுபோல புதிதாக வரும் இந்திய தூதரும் இருதரப்பு உறவை பலப்படுத்த தொடர்ந்து உறுதுணையாக இருப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் பாகிஸ்தான் சென்றி ருந்த சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப், வெளி யுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜிஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in