

சீனாவில் முதன்முறையாக, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு இச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களை இச்சட்டம் முழுமையாக பாதுகாக்கும்படி யாக அமையவில்லை.
தேசிய மக்கள் காங்கிரஸ் என அழைக்கப்படும் நாடாளுமன்றத் தின் நிலைக்குழு கடந்த ஞாயிற்றுக் கிழமை, குடும்ப வன்முறை தடுப் புச் சட்டத்தை நிறைவேற்றியது.
இதற்கு முன்பு திருமணம், குழந்தைகள் பாதுகாப்பு என தனித்தனியாக விதிமுறைகள் இருந்தன. சீனாவில் திருமணமான பெண்களில் நான்கில் ஒருவர் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார் என அனைத்து சீன மகளிர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான சட்ட வரை யறை ஏதுமில்லாததால், பாதிக் கப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்களை மகளிர் கூட்டமைப் புக்கு செல்ல காவல் துறையினர் அறிவுறுத்தி வந்தனர். பாதிக்கப் பட்டவர் கடுமையாக காயம்பட்டி ருந்தால் தவிர, இப்பிரச்சினையில் அதிகாரிகள் தலையிடாமல் இருந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, உடல் ரீதியாக துன்புறுத்து வதை விவாகரத்துக்கு ஒரு காரண மாக ஏற்கப்படாமல் இருந்தது. 2001-ம் ஆண்டு திருமணச் சட்டம் இயற்றப்பட்ட பிறகே, குடும்ப வன்முறையை வெளிப்படையாக சட்டம் தடை செய்தது.
தற்போது நிறைவேற்றப்பட் டுள்ள சட்டம் வரும் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும். குடும்ப உறுப்பினர்களால், அடித்தல், வாய்மொழியாக அச்சுறுத்தல், கட்டுப்படுத்தி வைத்திருத்தல், உடல், மனரீதியாகவோ, இதர வகைகளிலோ தாக்குதல் நடத்தப் பட்டால் அதனை குடும்ப வன் முறையாக இச்சட்டம் கருதுகிறது.
இதன் அடிப்படையில் புகார் பெறப்பட்ட உடனே, காவல் துறை நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டம் முழுமையாக இல்லை என சில அதிருப்தியாளர் கள் தெரிவித்துள்ளனர். பாலியல் அத்துமீறல், தன்பாலின உற வாளர்களிடையேயான குடும்ப வன்முறை போன்றவற்றை இச் சட்டம் உள்ளடக்கமாக கொள்ள வில்லை என கூறப்படுகிறது.